2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சிறுபோக செய்கைக்கான நீருக்கு தட்டுப்பாடில்லை

Menaka Mookandi   / 2015 மே 27 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கைக்கான நீர் குளங்களில் தாராளமாக உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த வருட இறுதிப்பகுதியில் பெய்த மழை காரணமாக குளங்களில் நீர் மட்டம் அதிகரித்து இவ்வருட சிறுபோக செய்கைக்கான நீர் போதியளவு காணப்பட்டது. அதனைக் கொண்டு மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் சிறுபோகம் செய்யப்பட்டது' என்றார்.

'அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் கிளிநொச்சியில் மழை பெய்தமையால் குளங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுபோகச் செய்கைக்குத் தேவையான போதியளவு நீர் குளங்களில் காணப்படுகின்றது.
 
நீர் இருக்கின்ற போதும், விவசாயிகள் நீர்ச்சிக்கனத்தை கடைப்பிடித்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு அதனை வெற்றிபெற வேண்டும்' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .