2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கிராம அபிவிருத்திச் சங்கங்களின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை?

George   / 2015 மே 27 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சில கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சமாசம் என்பவற்றில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண போக்குவரத்து கிராமிய வர்த்தக வாணிப அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கடந்த ஆண்டுகளில் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முறைகளை பின்பற்றாது செயற்பட்டுள்ளதுடன் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.

பிரதேச செயலாளர், வடமாகாண சபையின் போக்;குவரத்து கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உரிய விசாரணைகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் செயற்பட வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கமைய உரிய விசாரணை நடத்தப்பட்டு சங்கங்கள், சமாசங்கள் ஆகியன சிறந்த முறையில் நடத்தப்பட வழிஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .