2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அக்கராயன் சிறுபோக செய்கையாளர்களுக்கு மானிய உரம் வழங்க உத்தரவு

George   / 2015 மே 27 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய உரத்தை உடனடியாக வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்திலேயே மாவட்டச் செயலாளர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிறுபோக நெற்செய்கையில் தாங்கள் ஈடுபட்டு 40 நாட்களை கடந்த நிலையிலும் அக்கராயன் கமநலசேவை நிலையத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற மானிய உரம் தங்களுக்கு வழங்கப்படவில்லையென அக்கராயன் சிறுபோக செய்கையாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அதனை எங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்டச் செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என்றும் செய்கையாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

அக்கராயன் கமநலசேவை நிலையத்தினூடாக ஒருவாரத்துக்குள் சகல உரங்களும் வழங்கப்பட வேண்டும் என கமநலசேவை அதிகாரிகளுக்கு மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .