Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
George / 2015 மே 27 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயச் செய்கையில், செய்கை பண்ணப்படும் ஆட்டக்காரி நெல் இனத்தை தடைசெய்ய வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(26) நடைபெற்ற விவசாயக் குழுக்கூட்டத்திலேயே விவசாயிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கையில் விவசாயத் திணைக்களத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள ஆட்டக்காரி நெல்லினத்தை சில விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
ஆட்டக்காரி நெல்லினால் எரிபந்தம் எனப்படும் நோய் தொற்று ஏற்படுகின்றது. இது ஆட்டக்காரி பயிரிடப்பட்ட வயலில் இருந்து மற்றைய வயல்களுக்கு விரைவாக பரவுகின்றது. இதனால் இந்த வகை நெல்லை பயிரிடுவதை முற்றாகத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரினர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், ஆட்டக்காரி நெல்லினத்தை தடைசெய்வதற்கு கமக்காரர் அமைப்புகள் தீர்மானங்களை எடுத்து அதனை மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஊடாக மாவட்டச் செயலகத்துக்கு அறிக்கையிட்டு அதனை தடைசெய்வது தொடர்பான தீர்மானத்துக்கு வரமுடியும் என்றார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு ஆட்டக்காரி நெல் அரிசி மீதுள்ள அதிக கேள்வி காரணமாக விவசாயிகள் அதனைப் பயிரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago