Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 27 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அண்மித்த பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என உமையாள்புரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மக்களின் குடியிருப்பு பகுதிகளில் கழிவுகள் கொட்டப்பபடுவதனால் துர்நாற்றம் வீசுவதுடன் இலையான்களின் பெருக்;கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
கிளிநொச்சி நகரத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சேகரிக்கப்படும் திண்ம மற்றும் திரவக்கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளிகளிலும், ஏ - 9 வீதிக்கு அண்மையாகவும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அண்மித்த பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன.
இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் கொட்டப்படும் கழிவுகளை பறவைகள், விலங்குகள் காவிச் சென்று; குடியிருப்புக்களில் போடுகின்றன.
இதனால் நோய்கள் பரவும் அபாயநிலை காணப்படுவதாகவும் இவ்வாறு கழிவுகள் கொட்டப்படுகின்றமை தொடர்பாக பல தடவைகள் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதும், எதுவித நடவடிக்;கைகளும் எடுக்;கப்படவில்லை எனவும் தெரிவித்;தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago