2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்

George   / 2015 மே 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் கிராமத்து வீதியில் மாலைவேளைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அதன்காரணமாக அவ்வீதியின் ஊடாக மக்கள் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர் என அம்பலப்பெருமாள்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் தற்போது 110 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் ஜீவனோபாய தொழில் விவசாயம் ஆகும்.

மாலை 6 மணியாகியதும், யானைகள் இந்த கிராமவீதிக்கு வந்துவிடுகின்றன. இதனால்; இருட்டியதும் மக்;கள் போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர். சிலவேளைகளில் யானைகள், பயிர் நிலங்களையும் நாசம் செய்கின்றன.

இது தொடர்பில் வனஜீவராசி திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டு, திணைக்களத்தால் இந்தக் கிராம மக்களுக்கு யானை வெடிகள் வழங்கப்பட்டன. ஆனால், யானை வெடிகளுக்கு யானை கட்டுப்படுவதில்லை.

இதே நிலைமை அயல்கிராமங்களான கோட்டைக்கட்டியகுளம், பழையமுருகண்டி, ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான் ஆகிய பகுதிகளிலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .