2025 ஜூலை 05, சனிக்கிழமை

7 வயது சிறுமி மீது வன்புணர்வு; 15 வயது சிறுவன் கைது

Menaka Mookandi   / 2015 மே 28 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், ரொமேஸ் மதுசங்க

கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த 25ஆம் திகதி 7 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படத்தியதாகக் கூறப்படும், அதேயிடத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை புதன்கிழமை (27) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகிலுள்ள மலசலகூடத்துக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தாயாருக்கு விடயத்தைத் தெரிவித்த பின்னர் மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக சிறுமியை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன்போதே குறித்த சிறுமி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே, சம்பவத்துடன் தொடர்புடைய மேற்படி சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .