2025 ஜூலை 05, சனிக்கிழமை

இசைப்பிரியாவை வாழ்த்தி கௌரவித்தார் சந்திரகுமார் எம்.பி

George   / 2015 மே 28 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

வடமாகாண தமிழ்த் தினப் போட்டியில் இரண்டு பேச்சுப் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலய மாணவி சிவாபிரபு இசைப்பிரியாவை நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் பாராட்டிக் கௌரவித்தார்.

புதன்கிழமை(27) பாடசாலைக்கு  விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர், இசைப்பிரியாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு வாழ்த்துமடல் மற்றும் கற்றல் உபகரண தொகுதியினையும் வழங்கி வைத்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த சந்திரகுமார், அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள் பல சாதனைகளை படைத்து வருகின்றமை மகிழ்ச்சி அளிக்கிறது. 

இசைப்பிரியா போன்று மேலும் பல மாணவர்கள் உருவாக வேண்டும். அதன் மூலம் இந்தப் பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும். 

கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட இப்பிரதேச மாணவர்களுக்கு தற்போது வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற நிலையில் சாதனைகளை  படைத்து வருகின்றனர்.

மாவட்ட மட்டம் மாகாண மட்டம் வரை திறமை காட்டிய விவேகானந்தா வித்தியாலயம், தேசிய மட்டம் வரை செல்ல வேண்டும். இறுதி போரில் தந்தையை இழந்த நிலையில் தாயின் வழிநடத்தலில் சிறப்பாக கல்வி கற்றும் வரும் இசைப்பிரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .