2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கொக்கிளாய் - சாலை கரையோர பாதை அமைத்து தருமாறு கோரிக்கை

George   / 2015 மே 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட கரையோர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொக்குளாய் தொடக்கம் சாலை வரையில் கரையோரப் பாதையை உருவாக்கித்தரும்படி முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கம், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்றொழில் பிரதேசமான கொக்குளாய் தொடக்கம் சாலை வரையில் சுமார் 6,000 கரையோரக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

சீரான போக்குவரத்து மார்க்கம் ஒன்று இல்லாமையால் முல்லைத்தீவு நகரத்துடனும் பிறமாவட்டங்களுடனான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டு அல்லது துண்டிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள மக்கள் இருக்கின்றனர்.

யுத்தத்தால் பெரும் அழிவுகளைச் சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். 

கரையோரக் கிராமங்களுக்கான சீரான பாதை, போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் இந்தக் கிராமங்களில் இருக்கும் பாடசாலை மாணவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் கல்வியைத் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். வைத்தியசாலை, ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்வதில் இம்மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

கரையோர கிராமங்களை இணைத்து ஒரு பாதையை அமைப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதரம் முன்னிலைப்படும் என சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .