2025 ஜூலை 05, சனிக்கிழமை

அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு கல்வி வலயத்துக்குட்பட்ட மூன்று பாடாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை(27) காலை பாப்பாமோட்டை றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.பி.சேவியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 'ஆசையண்ணாவின் அன்புக்கனவுகள்' அமைப்பின் மன்னார், கிளிநொச்சி இணைப்பாளர்கள், அதிபர்கள், கிளிநொச்சி வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.செல்வரெட்ணம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாப்பாமோட்டை றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை, திருக்கேதீஸ்வரம் இந்து கலவன் பாடசாலை, கன்னாட்டி றோ.க.த.க.பாடசாலை ஆகிய  பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .