Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 28 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'பொது மக்களின் தகவலையடுத்து வியாழக்கிழமை (28) குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற நேரில் ஆராய்ந்தேன்' என்றார்.
முல்லைத்தீவு, கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த அத்துமீறல் முன்னெடுக்கப்படுகின்றது.
விகாரை அமைக்கப்படும் காணிக்குச் சொந்தமானவர்களில் ஒருவருடனும் ஆவணங்களுடனும் குறித்த இடத்துக்குச் சென்றபோது 20க்கும் அதிகமான படையினர் விகாரை கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது' என்றார்.
'பிக்குவுடன் உரையாட வேண்டும் என நான் கேட்டபோது, பிக்கு அங்கில்லை என இராணுவத்தினர் தெரிவித்தனர். இராணுவத்தினரிடம் காணி உரிமையாளரின் ஆவணங்களைக் காட்டி இந்த இடம் தனியார் காணி என்றும், இங்கு இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது சட்டவிரோதம் என்றும் கூறினேன்.
தாங்கள் தம்முடைய உயர் அதிகாரியின் பணிப்பின் பேரிலே அங்கே வந்துள்ளோம் என்றும் தமக்கு ஏதும் தெரியாது என்றும் இராணுவத்தினர் தெரிவித்தனர். மேலும் பிக்கு கொழும்பு சென்றிருப்பதாக கூறிவிட்டு விகாரையின் கட்டுமான பணிகளைத் தொடர்ந்தனர்.
சட்டவிரோதமான முறையில் படையினர் துணையுடன் ஒரு மதகுரு இவ்வாறு அத்துமீறுவது இங்கு சாதாரணமாகிவிட்டது. இது மதவாதத்தின் உச்சக்கட்டமாகும். இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவேன்' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025