2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

349 பேருக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

George   / 2015 மே 28 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யுத்த இடப்பெயர்வுகளின் காரணமாக தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை (உறுதி) பெற்றுக்கொள்ளாத முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 349 குடும்பங்களுக்கு நேற்று(27) புதன்கிழமை காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசச் செயலகத்தில் பிரதேச செயலாளர் டி.பிரிந்தாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில், பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முன்னால் தலைவர் ஏ.தனிநாயகம் கலந்து கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .