Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 29 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
குடும்பங்களிடயே பிணக்குகள் ஏற்படுவதற்கு போதைப்பொருட்களின் பாவனை ஓர் காரணமாக அமைந்துள்ளது. போதைப்பொருள் பாவனைக்கு அதிகபட்ச தண்டனைகள் விதிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் தெரிவித்தார்.
கஞ்சா பாவனையில் மூழ்கி தன்னையும் பிள்ளைகளையும் தனது கணவர் துன்புறுத்தி வருகின்றார் என தெரிவித்து பெண்ணொருவர் தொடர்ந்த வழக்கு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கை நன்கு அவதானித்த நீதவான், தொடர்ந்து கருத்து கூறுகையில், 'அதிகளவான குடும்பங்களிடையே வன்முறைகள், பிணக்குகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு போதைப்பொருட்களின் பாவனையே காரணமாக அமைகின்றன' என்றார்.
'யுத்;தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தை அடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் கலாசார சீரழிவுகள், போதைப்பொருட்களின் பாவனைகள் என்வற்றின் அதிகரிப்பால் குடும்ப வன்முறைகள் குடும்பங்களின் பிரிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன. போதைப்பொருட்களின் பாவனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்;படும்' என்று நீதவான் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago