2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு அபராதம் விதிப்பு

Menaka Mookandi   / 2015 மே 29 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் நுகர்வோர் சட்டங்களை மீறி பொருட்களை விற்பனை செய்த 22 வர்த்தகர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் கடந்த வாரங்களில் கிளிநொச்சி நகர்ப் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலைகளிலும் பார்க்க அதிகூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்தமை, தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்ட 22 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு வியாழக்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வர்த்தகர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .