2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நன்னீர் மீன்பிடிப்பாளர் சங்கங்களுக்கு வலை மற்றும் கதிரைகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 மே 29 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கடல் வளம் அற்ற நிலையிலும் 500 இற்கும் மேற்பட்ட குளங்களை நம்பி மீன்பிடியில் ஈடுபடும் நன்னீர் மீன்பிடிப்பாளர் சங்கங்களுக்கு வலைகள் மற்றும் கதிரைகள், இன்று வெள்ளிக்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன.

வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து கிராமிய அமைச்சின் ஊடாக வழங்கி வைக்கப்பட்ட இந்த உதவித்திட்டத்தில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களையும் சேர்ந்த 16 மீனவ சங்கங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெற்றன.

இதேவேளை, நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் பல விடங்களுக்கு அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலனால் தீர்வுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், இ. இந்திரராஜா, எம்.பி நடராஜ், ஜயதிலக உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .