Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 02 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் நீர் சிறுபோக செய்கையின் தேவைக்காக தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் இடதுகரை வாய்க்கால் ஊடாக வயல் நிலங்களுக்குச் செல்லும் நீர் அக்கராயன் அணைக்கட்டு வீதியில் ஓரிடத்தில் வீதியை குறுக்கறுத்துப் பாய்வதன் காரணமாக குளத்தின் நீர் அக்கராயன் ஆற்றினைச் சென்றடைந்து வீண்விரயமாகிக் கொண்டிருக்கின்றது.
அக்கராயன்குளத்தின் கீழ் இவ்வாண்டு 2500 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. குளத்தின் நீர் நெற் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. அக்கராயன் அணைக்கட்டு வீதியில் அந்தோனியார் ஆலயத்துக்கு முன்பாக வீதியின் குறுக்கறுத்து வாய்க்காலில் செல்லும் நீர் வீணாகப் பாய்வதன் காரணமாக நீர் விரயமாகின்றது.
இப்பகுதியிலுள்ள கமக்காரர் அமைப்புகள் இது தொடர்பாக கவனம் செலுத்தாமை நீர் விரயத்துக்கான முக்கிய காரணமாகவுள்ளது.
சிறுபோக நெற்செய்கை கூட்டத்தில் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்பது கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய வேண்டுகோளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Jul 2025