2025 ஜூலை 02, புதன்கிழமை

கிளிநொச்சியில் பெண் பொலிஸார் பற்றாக்குறை

Menaka Mookandi   / 2015 ஜூன் 03 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் அதிலும் குறிப்பாக தமிழ் பெண் பொலிஸார் பற்றாக்குறையாகவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெண்கள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதில் பொலிஸார் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 1 தமிழ் பெண் பொலிஸாரும் இரண்டு சிங்கள பெண் பொலிஸாரும் கடமையில் உள்ளனர். கிளிநொச்சியில் தற்போது குடும்ப வன்முறைகள், மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுவதால் அது தொடர்பில் பெண்களால் முறைப்பாடு செய்யமுடியவில்லை.

ஆண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்கு பெண்கள் வெட்கப்படுவதுடன், பிரச்சினை தொடர்பில் முழுமையான விடயங்களைத் தெரிவிப்பது இல்லை. இதனால் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ள முடியாமல் பொலிஸார் இருக்கின்றனர்.

அத்துடன், முறைப்பாடு செய்ய வருபவர்கள் மிகவும் நீண்ட நேரம் காத்திருந்த பின்னரே முறைப்பாட்டை பதிவு செய்ய வேண்டியுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .