Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2015 ஜூன் 03 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் ஆயர், மேதகு இரா. யோசேப்பு ஆண்டகைக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் இயன் மருத்துவம் மூலமாக அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் இவற்றுடன் இரத்த அழுத்தம், நீரழிவு, ஆஸ்மா போன்றவைகளும் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் நிலை தொடர்பாக பல தரப்புக்கள் மத்தியில் இருந்து அக்கறையும் கரிசனையும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய. கலாநிதி எச். கே. டீ. எஸ். குலரெட்னத்தனின் தகவலை அடிப்படையாக கொண்டே இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 02ஆம் திகதி, மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின், நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆயர், துரதிஸ்ரவசமாக மே மாதம் 17ஆம் திகதி பக்கவாதத்தினாலும் பாதிக்கப்பட்டார்.
இதனால், அவருடைய வலது கை மற்றும் வலது கால் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் ஆயர், தொடர்ந்தும் மருத்துவமனையில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயரின் உடல்நிலையில் அக்கறையுள்ள அனைவருடைய பிரார்த்தனைக்காகவும் நன்றி தெரிவிக்கின்ற அதே வேளையில், அவருடைய உடல்நலம் முன்னேருவதற்கு தொடர்ந்தும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) ஆயருக்கான விசேட பிரார்த்தனை தினமாக அனுஷ்டிக்குமாறும் இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Jul 2025