2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தை தரமுயர்த்த கல்வி அமைச்சு அனுமதி

Thipaan   / 2015 ஜூன் 03 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயம் மீண்டும் 1 சீ தரப்பாடசாலையாக இயங்குவதற்கு மாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என பாடசாலையின் அதிபர் ஏ.சி. ரியாஸ், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த பாடசாலை தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் 1 சீ தர பாடசாலையாக இயங்கி வந்துள்ளது.

எனினும் 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தப்பாடசாலை முஸ்லிம் வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு குறித்த பாடசாலையின் புதிய அதிபராகக் கடமை ஏற்ற நான், இந்த பாடசாலை 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் மகா வித்தியாலயமாக இயங்கி வந்தது பற்றி முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் உதயராணி முனீஸ்வரன் மற்றும் வலயக்கல்வி அலுவல நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.ஜவாத் ஆகியோர் ஊடாக கடித மூலம் மாகாண கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தினேன்.

அத்துடன், குறித்த பாடசாலையை மீண்டும் 1 சீ தரப்பாடசாலையாக இயங்குவதற்குரிய அனுமதியை வழங்குமாறு அதிபர் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இவ்வாறு எனது வேண்டுகோளை ஏற்று குறித்த பாடசாலையை மீண்டும் 1 சீ தரப் பாடசாலையாக இயங்குவதற்குரிய அனுமதியை மாகாண கல்வி அமைச்சு வழங்கியுள்ளது என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .