Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூன் 03 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா மாவட்ட புகையிரதக் கடவைகளின் பாதுகாப்பு ஊழியர்களாக நிரந்தர நியமனம் இன்றி கடமையாற்றுபவர்கள், தமது நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமையுடன் மூன்றாவது நாளாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தாடர்பில் வவுனியா மாவட்ட புகையிரத காப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெ.றொகான் தெரிவிக்கையில்,
புகையிரத சேவை விஸ்தரிக்கப்பட்ட போது ஆறு மாத காலப்பகுதிக்குள் எம்மை நிரந்தரமாக்குவதாகத் தெரிவித்து பொலிஸாரால் நாம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டோம்.
ஆனால், இன்று மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் எமக்கு நிரந்தர நியமனம் எதுவும் வழங்கப்படவில்லை.
ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. மாதம் 31 நாட்களும் வேலை செய்யும் எங்களுக்கு சுகயீன விடுமுறை கூட வழங்கப்படுவதில்லையென குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் பொலிஸார் தங்களின் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் வேலைசெய்யும் 75 ஊழியர்கள் மாத்திரமல்ல மன்னார் மாவட்டம், யாழ்.மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் இலங்கையில் கடமையாற்றும் அனைத்து புகையிரத கடவை ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனத்தை இந்த புதிய அரசாங்கம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025