Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 04 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களால் விகாரை அமைக்கப்படும் பகுதிக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை (05), கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் செய்யவுள்ளதுடன், காணி உரிமையாளர்கள் சிலர், அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபடவுள்ளனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் இணைத்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த விகாரை அமைக்கப்படுகின்றது.
இந்த விகாரை அமைப்பதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் பல மில்லியன் ரூபாய் செலவு செய்வதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Jul 2025