2025 ஜூலை 02, புதன்கிழமை

புகைத்தலுக்கு எதிராக பேரணி சென்ற கிளிநொச்சி மாணவர்கள்

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், வியாழக்கிழமை (04) மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வித்தியாலய முன்றலில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி பிரதான பொலிஸ் நிலையம் வரையில் சென்று முடிவடைந்தது. அங்கு புகைத்தல் எதிர்ப்புத் தொடர்பான விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வீதி விபத்துக்களை தவிர்த்தல் தொடர்பாக பொலிஸாரின் விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்றது.

முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள் பாடசாலை முன்றலில் இருந்து முழங்காவில் பிள்ளையார் ஆலயம் வரையில் பேரணியாகச் சென்று அங்கு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.

மாணவர்கள், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .