2025 ஜூலை 23, புதன்கிழமை

விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வுமே இன்றைய தேவை: ரிசாட்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வுமே இன்று தேவையாக உள்ளதாக கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகம் நடத்திய தேசிய நத்தார் விழா மன்னார் செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை  நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்த நத்தார் விழாவில், மன்னார் ஆயர்   இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை உட்பட கத்தோலிக்க குருமார்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ஒவ்வொரு மதமும் இன, மத ஒற்றுமையினைத்தான் எடுத்துக் கூறுகின்றது. விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வுமே இன்று எமக்கு தேவையாக உள்ளது. இதனை ஏற்படுத்திக்கொள்ள இந்த 'தேசிய நத்தார் விழா' நிகழ்வு ஒரு சந்தர்ப்பமாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

இங்கு மன்னார்  ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை உரையாற்றுகையில்,

'கடவுள் அன்பை விரும்புகின்றவர்.  அன்பு செலுத்தும் இடத்தில் கடவுளைக் காணலாம். அதேபோல் நாம் கடவுளுக்கு அன்பு செலுத்தினால் தான் மனிதனுக்கு உதவி செய்ய முடியும்.  இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ள அமைச்சர்  ரிசாட்  பதியுதீனின் வருகையும் பாராட்டுக்குரியது எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .