Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பேசாலை வெற்றிமாங்குடியிருப்பு கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் காணியை கடற்படையினர் அபகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பேசாலை சென்-விக்டரிஸ் ஆலய அருட்பணி பேரவை கவலை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பேசாலை சென்-விக்டரிஸ் ஆலய அருட்பணி பேரவை, மன்னார் பிரஜைகள் குழுவின் கவனத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை(7) கொண்டு வந்துள்ளதோடு முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பேசாலை கிராமத்தின் மேற்குப் பக்கமாக பேசாலையில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுமார் 210 ஏக்கர் பரப்பளவுகொண்ட வெற்றிமாங்குடியிருப்பு என்றழைக்கப்படும் இக்காணி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்துக்குச் சொந்தமானது.
இக்காணிக்கான உறுதி, நில அளவைப்படம்,வரலாற்றுத்தாள் போன்ற ஆவணங்கள் மன்னார் மறைமாவட்ட ஆயரின் பெயரில் எம்மிடம் உள்ளன.
சுமார் 10 வருடங்களுக்கு முன் இங்கு வந்த கடற்படையினர் இங்கு படை முகாம் ஒன்றை அமைக்க முற்பட்ட போது பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணிச்சபையினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து படை முகாம் ஒன்றை குறித்த கோயில் காணியில் அமைப்பதை தடுத்தனர்.
இந்த நிலையில், இப்பணிக்கு பொறுப்பாக வந்திருந்த கடற்படை பொறுப்பதிகாரி எமது கிராமத்தின் அன்றைய பங்குத்தந்தையுடன் இணக்கமாக நட்புறவுடன் உரையாடி தாங்கள் தற்காலிகமாக சிறிது காலம் இங்கு இருப்போம் என்றும் பொருத்தமான ஒரு இடத்தைக் கண்டு பிடித்தவுடன் இங்கிருந்து இடம் மாறி விடுவோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் எமது பங்குத்ததந்தை மற்றும் மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் ¾ ஏக்கர் அளவான காணியினை பலவந்தமாக பிடித்து அக்காணியில் தற்காலிகமாக தமது கடற்படை முகாமை அமைத்தனர்.
தற்போது அக்காணி விசாலமாக்கப்பட்டுள்ளதோடு சுமார் 3 ஏக்கர் அளவுள்ள காணியை கடற்படையினருக்கு அளந்தெடுப்பதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் மேற்குறித்த காணியை நில அளவை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது எமது மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றை எல்லாம் புறந்தள்ளி அதை அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தி எந்த வித அறிவித்தலும், நஸ்டஈடுகளும் இன்றி தமது விருப்பத்துக்கு நில அளவையாளர் ஒருவரைக் கொண்டு குறித்த காணியில் சுமார் 3 ஏக்கர் காணியை சுவீகரிக்க முயற்சிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த காணி அபகரிக்கும் செயற்பாட்டை பேசாலை வெற்றி நாயகி ஆலய மேய்ப்புச்சபையும், பேசாலை மக்களும் வண்மையாகக் கண்டித்துள்ளனர். குறித்த காணி அபகரிப்பு முயற்சியை உடனடியாக கைவிடுமாறும் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
-மத பீடங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு சுவீகரிப்பது பொருத்தமானதல்ல.
-இவ்வளவு காலமும் பல்வேறு படைத்தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவது என்ற தீர்மானத்தில் பல ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம், அரசாங்கம் மீள வழங்கி வருகின்ற இவ்வேளையில் இக் காணி அபகரிப்பு செயலானது அரசின் தற்போதைய கொள்கைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது.
-படை வீடுகள் எம் மத்தியில் வேண்டாம் என்ற குரல் வட பகுதி மக்களிடம் இருந்து மட்டுமல்ல அகில உலக ரீதியிலும் ஆமோதிக்கப்படுகின்ற இவ்வேளையில் இக் காணி சுவீகரிப்புக்கள் முரணான தோற்றப்பாட்டைக் கொண்டுள்ளது.
எனவே, எமக்குச் சொந்தமான குறித்த காணியை அளவீடு செய்வதையும் காணி சுவீகரிப்புச் செய்யப்படுவதையும் உடனடியாக நிறுத்தும்படியும், ஏற்கெனவே உள்ள தற்காலிக கடற்படை முகாமை அகற்றி அக்காணியை மீளவும் தமக்கு ஒப்படைக்கும்படியும்; கேட்டுக்கொள்ளுகின்றோம் என இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago