2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மின்கட்டணம் செலுத்தாத 25 கடைகளுக்கு சீல்

Thipaan   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் அமைந்திருக்கும் கடைகளில் மின்கட்டணங்கள் செலுத்தாமல் இருக்கும் கடைகளுக்கு கரைச்சி பிரதேச சபையால், செவ்வாய்க்கிழமை (30) சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள இந்த சந்தையில் அமைந்திருக்கும் கடைகளுக்கு ஒரு மின்குழிழுக்கு மாதாந்தம் 750 ரூபாய் என்ற வகையில் மின்கட்டணம் பிரதேச சபையால் அறவிடப்படுகின்றது.

இவ்வாறு அறவிடப்படும் மின்கட்டணத்தை இரண்டு மாதம் தொடக்கம் 6 மாத காலப்பகுதியில் செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு கரைச்சி பிரதேச சபையால் திங்கட்கிழமை (29)  எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த எச்சரிக்கை நோட்டீஸில், மின்கட்டணம் செலுத்தாத வர்த்தகர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை 8 மணிக்கு முன்னர் மின்கட்டணங்களை செலுத்தினால் மட்டுமே கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அறிவித்தல் விடுக்கப்பட்ட வர்த்தகர்கள் எவரும் மின்கட்டணங்கள் செலுத்ததாத நிலையில், வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

இது தொடர்பான வர்த்தகர்கள் கருத்துக்கூறுகையில்,

பொதுச் சந்தைக்கு பொதுவான மின்இணைப்பு வழங்கப்பட்டு, அதற்கு ஏற்படும் மின்கட்டணத்தை பாவனைக்கு ஏற்றவிதத்தில் கட்டணங்கள் அறவிடப்படும் என பிரதேச சபை அறிவித்திருந்தது.

எனினும் மாறுபட்ட அளவுகளில் பிரதேச சபை மின்கட்டணங்களை செலுத்தக்கோரியிருந்ததாக அவற்றை செலுத்தவில்லையென வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நிலுவை மின்கட்டணங்கள் அனைத்தும் செலுத்தினால் மட்டுமே கடைகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என  கரைச்சி பிரதேச சபை கூறியுள்ளது.
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .