2025 ஜூலை 23, புதன்கிழமை

29 பேருக்கு பிடிவிறாந்து

Super User   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 29 பேருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட குறித்த 29 பேரும்  நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் இவர்கள் வழக்கு விசாரணைகளில் ஆஜராகாமையினாலேயே நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 29 பேரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முள்ளியவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .