2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விதை நெல் கொடுப்பனவு 31ஆம் திகதி வழங்கப்படும்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் விதை நெல் கொள்வனவுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு எதிர்வரும் 31ஆம் திகதி வழங்கப்படும் என்று மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் திங்கட்கிழமை (29) அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையில் அழிவுகளை சந்தித்த விவசாயிகளுக்கு இவ்வருடம் காலபோக செய்கையில், விதை நெல் கொள்வனவுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து 50 மில்லியன் ரூபாய் அனுப்பப்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 27ஆம் திகதி கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடு; செய்திருந்தபோதும், கொடுப்பனவு பெறுபவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக இந்தக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டது.

தற்போது, பெயர்ப்பட்டியல் சீர்செய்யப்பட்டதை அடுத்து, கொடுப்பனவு எதிர்வரும் 31ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு; செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் 50 ஆயிரத்து 126 ஏக்கர் நெற்செய்கை பகுதியளவில் மற்றும் முழுமையாக அழிவடைந்திருந்ததுடன், அழிவின் தன்மைக்கேற்ப கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .