2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

33 ஆண்டுகளின் பின்னர் வழிபாடு

சண்முகம் தவசீலன்   / 2017 ஜூலை 05 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தோடு தொடர்புடைய வாவெட்டி மலையில் அமைந்திருக்கின்ற வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்கு, ஆலய பரிபாலனை சபை உள்ளிட்ட மக்களால், இன்று (05)  வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

1984ஆம் ஆண்டுக்குப் பின்னர், யுத்த சூழ்நிலை காரணமாக, ஆலயத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தால், வனவள பாதுகாப்புப் பிரிவு, பொலிஸார், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவு அதிகாரிகளோடு  இவ்வாண்டு கலந்துரையாடி, தீர்க்கமான முடிவின் பின்னர்,  அனைவரையும் அழைத்துச் சென்று, வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்குரிய வழிபாடுகளை ஆலய பரிபாலனை சபையினரும் மக்களும் இணைந்து இன்று மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .