2025 ஜூலை 17, வியாழக்கிழமை

37 மில்லியன் ரூபாய் செலவில் ஆசிரியர் விடுதி திறப்பு

Kogilavani   / 2014 ஜூலை 29 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி, முருகானந்தா கல்லூரிக்கென கொரிய அரசின் 37 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதி கட்டிடத் தொகுதி திங்கட்கிழமை(28) திறந்து வைக்கப்பட்டது.

முரசுமோட்டை பகுதியில் 4 மாடி கட்டடமாக இவ்விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியை பாரம்பறிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி, இலங்கைக்கான கொரிய தூதுவர் லூங் வூன் சம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இவ்விடுதிகள் திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக தூர இடங்களிலிருந்து முருகானந்தா கல்லூரிக்கு கல்வி கற்பிக்க வரும் ஆசிரியர்களது போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் கொரிய அரசின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் கூடங்கள் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.

இதில் 12 வகுப்பறைகளைக் கொண்டதான வகுப்பறை கட்டடம், கணினி ஆய்வுகூடம், பல்லூடக கூடமும் என்பன திறந்து வைக்கப்பட்டன. இவை,  கொரிய அரசின் கொய்க்கா நிறுவனம் 45 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X