2025 ஜூலை 21, திங்கட்கிழமை

4 வயது சிறுவன் வைத்தியசாலையில்

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 வவுனியா - குருமன்காடு பகுதியில், சிறிய தந்தையால் அடித்து துன்புறுத்தி காயங்களுக்குள்ளான 4 வயது சிறுவன், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 தொடர்ச்சியாக குறித்த சிறுவன் குறித்த நபரால் அடித்து துன்புறுத்தலுக்குள்ளாகி வந்த நிலையில், நேற்று (22) மாலை, அச்சிறுவன் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

 வவுனியா - குருமன்காடு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. இவ்வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவன் வேறு திருமணம் செய்த நிலையில், அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். குறித்த பெண்ணுக்கு 4 வயது சிறுவன் ஒருவன் உள்ளான். குறித்த சிறுவனையே அப்பெண்ணின் 2ஆவது கணவன் (சிறிய தந்தை) அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

 குறித்த நபர், அச்சிறுவனை பார்க்கும் போது, முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாகக் கூறியே, அச்சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் சிறுவனின் கன்னம், முதுகு, கண் ஆகிய பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.  

அப்பகுதியில் வேலைக்குச் சென்ற ஒருவர், இதனை அவதானித்து, குறித்த சிறுவனை மீட்டு தனது நண்பர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைந்துள்ளார்.  

இதையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிஸார், சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சிறுவனை தாக்கிய சிறிய தந்தையை கைதுசெய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X