2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஆட்சிக்காலத்தை 4 வருடங்களாக குறைப்பேன்: மைத்திரி

Gavitha   / 2014 டிசெம்பர் 30 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

அமெரிக்கா போன்று ஜனாதிபதி ஆட்சிக்காலம் 4 வருடங்கள் ஆக்கப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வவுனியா வைரவபுளியங்களம் சிறுவர் பூங்காவில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அவரின் வெற்றிக்காக உழைத்த கட்சிகளின் தலைவர்களது கருத்துக்களை கேட்ட மறுத்தார். நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அச்சுறுத்தி பயமுறுத்தி இருந்தமையினால், ஏனைய நீதியரசர்களும் அச்சத்துக்கு உள்ளானார்கள்.

அரச அதிகாரிகளை அச்சுறுத்தி அவர்களை சுதந்திரமாக செயற்படாமல் செய்து, அரச நிர்வாகத்தை ராஜபக்ஷ குடும்பம் தடுத்திருந்தது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை நாடாளுமன்றம் மற்றும் அரச நிர்வாகத்துக்கு பகிர்ந்தளிக்கவுள்ளேன். மேலும் ஜனாதிபதிப் பதவிக் காலத்தை நான்கு வருடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது ஆட்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது. அதேவேளை பொலிஸ் பாதுகாப்பு கோரும் பட்சத்தில் வழங்கப்படும்.

இன்று விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பசளை வகையில் இரசாயனம் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுகின்றது. இதனால் நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு, மக்கள் முகம் கொடுக்கின்றனர். தற்போதைய மன்னர் ஆட்சியில் இளைஞர்கள் குறித்து எந்தவொரு செயற்திட்டமும் இல்லை. அவர்கள் பல்வேறு சமூகப்பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .