Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 10 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம் - அரசடி வீதி நல்லூர் பகுதியில், இளம் தாய் ஒருவர் ஐந்து பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாக, உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், நேற்று (09) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம், அரசடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீபன் திவானி (வயது 36) என்ற குறித்த இளம் தாய், அவரது பிள்ளைகளான பிரதீபன் கஜநிதன் (வயது 11), பவனிதன் (வயது 09), அருள்நிதன் (வயது 08) மற்றும் இரட்டை பிள்ளைகளான யதுசியா, யஸ்ரிகா (வயது 02) ஆகியோருடன், நேற்று முன்தினம் (09) முதல் காணாமல் போயுள்ளார்.
குறித்தப் பெண்ணின் கணவன், சாரதி வேலை செய்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல்போன தினத்தன்று, குடும்பத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் பின்னர் தாய் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீடு பூட்டியிருந்ததுடன், பிள்ளைகளுடன் அப்பெண்ணையும் காணவில்லை என, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
4 hours ago