2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

50 இலட்சம் மதிப்புடைய பீடி இலை மூட்டைகள் மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் மதிப்புடைய உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன.

உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து சுங்கப்பகுதியினரும் பொலிஸாரும் இணைந்து குறித்த மூட்டைகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 25 பீடி இலை மூடைகள் உயர் ரகத்தை சேர்ந்தது எனவும் இதன் மதிப்பு சுமார் 50 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடலில் உள்ள மூட்டைகளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த மூட்டைகளை இலங்கைக்கு கடத்தியபோது,  அப்படகு  மூழ்கியதால்  மூட்டைகள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் அல்லது கடற்படையினரினரின் ரோந்துப்பணியின் போது மூட்டைகளை கடலில் தள்ளிவிட்டு படகுடன் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X