2025 மே 15, வியாழக்கிழமை

50 கிலோகிராம் கஞ்சாவுடன் பெண் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், செ.கீதாஞ்சன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில், இன்று (20), 50 கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி - இரணைமடு விமானப் படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, கிளிநொச்சி புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி குறித்த தகவலை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, அவரது வழிநடத்தலில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பதில் கடமை பொறுப்பதினாரி சம்பிக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால், இந்தக் கஞ்சா பொதியும், அதனை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்காக இளம் குடும்ப பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர். நான்கு நாள்கள் குறித்த பெண்ணை பொலிஸ் காவலில் தடுத்து விசாரிக்க மன்றிடம் பொலிஸாரால் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதி, கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரால் கொண்டுவரப்பட்டது எனவும், குறித்த சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .