2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

60 குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

வட்டுக்கோட்டை, இந்துவாலிபர் சங்கத்தால் மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி பைகள் ஞாயிற்றுக்கிழமை (05) வழங்கப்பட்டன. 

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மக்களின் வாழ்வாதார விருத்திக்கு உதவிகள் வழங்கும் நடவடிக்கையின் கீழ் இந்த அரிசி பைகள் வழங்கப்பட்டுள்ளன.

மல்லாகம் நீதவான் நலன்புரி நிலைய முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டு இந்துவாலிபர் சங்க தலைவரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ், வட்டு மத்திய கல்லூரி அதிபர் ந.சபாரட்ணசிங்கி ஆகியோh கலந்துகொண்டு அரிசி பைகளை வழங்கினர். 

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் மக்களின் வாழ்வாதார விருத்திக்காக யாழ்.மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கும் உதவிகளை புரிந்து வருகின்றது.

இந்த உதவிகள் உள்நாட்டு அன்பர்கள் மற்றும் வெளிநாட்டு வாசிகளின் உதவிகளை பெற்று வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .