2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

65 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத வீதி

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராமத்தின் பிரதான வீதி கடந்த 65 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. 

1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் குடியேற்றத்;திட்டத்தில் தற்போது 500 வரையான குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் இக்கிராமத்துக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெறுகின்ற கூட்டங்களில் குறித்த வீதி புனரமைக்கப்படும் என அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையிலும் இதுவரை புனரமைக்கப்படவில்லை.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, நோயாளர்கள், விவசாயிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, குறித்த வீதியை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .