2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

7 குளங்கள் புனரமைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்தாண்டு பெய்த மழையின் போது உடைப்பெடுத்த ஏழு குளங்களும் புனரமைக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு பெய்த மழையின் போது, நித்தகை குளம் உட்பட ஏழு குளங்கள் உடைப்பெடுத்திருந்தன.. துணுக்காய், மாந்தை கிழக்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இக்குளங்கள் காணப்பட்டன.

இதனைவிட, எதிர்காலத்தில் உடைப்பெடுக்கக் கூடிய குளங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பல குளங்கள் புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு, மழை காலத்தில் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .