2025 மே 09, வெள்ளிக்கிழமை

777 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தீயிட்டு அழிப்பு

Niroshini   / 2021 ஜூலை 06 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சட்டவிரோதமான முறையில், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் கட்டிகள், நேற்று  (5) மாலை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாத காலப் பகுதியில், மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குறித்த உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளே, இவ்வாறு மன்னார் பொலிஸாரால், மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, தாரபுரம் காட்டு பகுதியில் வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

இதன் போது, 28 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 777 கிலோ 600 கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டிகள், சுகாதார நடைமுறைக்கு அமைவாக, தீயிட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X