2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னார் மாவட்டத்தில் 78,433 பேர்; வாக்களிக்க தகுதி

George   / 2015 ஜனவரி 07 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 78 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலக உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 32 வாக்களிப்பு நிலையங்களும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 12 வாக்களிப்பு நிலையங்களும், முசலி  பிரதேச செயலாளர் பிரிவில்  8 வாக்களிப்பு நிலையங்களும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் 6 வாக்களிப்பு நிலையங்களும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 12 வாக்களிப்பு நிலையங்களுமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

பொதுமக்கள் வாக்களிப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .