2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

8152 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் கோரி அரச அதிபர் கடிதம்

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்     

தற்போது நாட்டில்  ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நாளாந்தம் தொழில் செய்து வாழ்கின்ற குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  அவர்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என பல தரப்பினர்களாலும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இது தொடர்பில்  அரசியல்வாதிகள் பலர்  அரசின் உயர்மட்டத்தின் கவனத்திற்கும் கொண்டுசென்றிருந்தனர். 

இதனையடுத்து  இவ்வாறான குடும்பங்களுக்கு உலருணவு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மாவட்டச் செயலகங்கள் முன்னெடுக்கும் வகையில் தகவல் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில்  8152 குடும்பங்களுக்கு உலருணவு வழங்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் , அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

நேற்றைய தினம் (23) அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கை கடிதத்தில், கிளி நொச்சி  மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பரிவில் 5938 குடும்பங்களுக்கும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 610 குடும்பங்களுக்கும், பூநகரியில் 639 குடும்பங்களுக்கும்,பச்சிலைப்பள்ளியில் 965 குடும்பங்களுக்கும் உலருணவு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .