2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அக்கராயன் குளத்தின் கீழ் மீள்விதைப்பு

Niroshini   / 2016 ஜூன் 01 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் குளத்தின் கீழ் மீள்விதைப்பு வேகமாகத் தொடங்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

சிறுபோக நெற்செய்கை மாவட்டச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்று பயிர்ச்செய்கை தொடங்கிய நிலையில், பெய்த பெருமழை காரணமாக அக்கராயன் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த 2,790 ஏக்கர் சிறுபோக நெற்பயிரில் 2,500 ஏக்கர் அழிவடைந்தன.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், அக்கராயன்குளத்தின் கீழ் மீள்விதைப்பு மேற்கொள்வதெனவும் காலபோக நெற்செய்கையினைக் கருத்தில்கொண்டு, மூன்றுமாத நெல்லினைங்களை பயன்படுத்தி மீள்விதைப்பினை வேகப்படுத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அக்கராயனில் மீள்விதைப்பு வேகமாக நடைபெற்றுவருகின்றது. இதேவேளை ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணியில் மீள் விதைப்பு மேற்கொள்ள முடியாதவாறு நீர்நிரம்பிக் காணப்படும் தாழ்நில விவசாயிகளுக்கென வேறு இடத்தில் 150 ஏக்கர் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .