2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அகதி தஞ்சம் கோரிச் சென்ற இலங்கையர்கள்

Freelancer   / 2022 ஜூன் 17 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சட்ட விரோதமாக  தமிழகத்திற்கு  செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மரைன் பொலிஸார் விரைந்து சென்று அவர்களை மீட்டு விசாரணைக்காக  மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்துள்ளவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் என தெரிய வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .