Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மேற்கில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அடிக்கடி உடைந்துவிடுவதன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் நடுவீதியில் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி நகரத்தில் இருந்து புதுமுறிப்பு வரையான வீதி மாத்திரம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், ஊற்றுப்புலம், கோணாவில், ஸ்கந்தபுரம், அக்கராயன், ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம், ஜெயபுரம், பல்லவராயன்கட்டு ஆகிய கிராமங்களுக்கான முதன்மை வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக குண்டும் குழியுமான வீதியில் பயணிக்கும் பஸ்கள் அடிக்கடி பழுதடைகின்றன.
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் அதிகளவானவை, 1990ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து, பயன்படுத்தப்படும் பஸ்களாக இருப்பதன் காரணமாக, டயர்களில் காற்றுப் போதல், இயந்திரங்களின் பாகங்கள் பழுதடைதல் அல்லது உடைதல் என்பன அடிக்கடி ஏற்படுகின்றன.
இதேவேளை, திங்கட்கிழமை (17) முழங்காவிலில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பஸ், கோணாவில் மகா வித்தியாலயம் முன்பாக பழுதடைந்ததன் காரணமாக, இன்னொரு பஸ் கிளிநொச்சியில் இருந்து நீண்ட நேரத்தின் பின்னர் அவ்விடத்துக்கு வந்து பயணம் தொடர்ந்தது.
கிளிநொச்சி மேற்கில் போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை புதிய பஸ்களாக பயன்படுத்துமாறு தொடர்ச்சியாக கிளிநொச்சி மேற்கின் பல கிராமங்களின் பொது அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago