2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அடுத்த வருடம் புதிய கட்டடத் தொகுதி பெற்றுக்கொடுக்கப்படும்

Niroshini   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அடுத்த வருடம் கிளிநொச்சி பொதுச்சந்தையில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் புதிய நிரந்தரக் கட்டடத்தொகுதி பெற்றுக்கொடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி பொது சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அழிவடைந்த கடைத் தொகுதிகளை மீள அமைப்பதற்கான அடிக்கல்நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் எப்போதும் உங்களுக்கு சேவை செய்பவர்களாகதான் உள்ளோம். வெறுமனே இதை கதைப்பதற்கான களமாக பயன்படுத்தாமல் செயலாற்றுவதற்கான களமாக பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் வங்கிக்கடன் தொடர்பில் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். அதுவும் உங்களுக்கு தீர்க்கப்படும்.

இங்கு எரிந்தது வெறும் கடைத்தொகுதியல்ல. உங்கள் வாழ்வும் சேர்ந்து எரிந்துள்ளது. எனவே இந்த கடைத்தொகுதி உங்களுக்கு விரைவாக கிடைக்கும். நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .