2025 மே 09, வெள்ளிக்கிழமை

அடம்பனில் மாபெரும் இரத்ததான முகாம்

Niroshini   / 2021 ஜூலை 11 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மாந்தை மேற்கு பிரதேச செயலகம், மன்னார் ஹரிதாஸ் வாழ்வுதையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம், அடம்பன் பிரதேச வைத்தியசாலையில், இன்று (11) காலை 9.30 மணியளவில்,; நடைபெற்றது.

இதன் போது, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், மன்னார் ஹரிதாஸ் வாழ்வுதைய இயக்குநர் அருட்தந்தை அன்டன் அடிகார் ஆகியோர் கலந்துகொண்டு இரத்ததான முகாமை ஆரம்பித்து வைத்தனர்.

இதில், அடம்பன் பிரதேச இளைஞர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு, இரத்ததானம் வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X