2025 மே 21, புதன்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் ம.வி பாடசாலைக்கு 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இரண்டு மாடிக் கட்டடம் அமைப்பதற்கு, நேற்று மாலை வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்  ரிஷாட் பதியூதீனின் நிதி ஒதுக்கீட்டில் இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இதன் போது மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் என்.முஜாஹிர், அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான், மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X