2025 மே 17, சனிக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

புதிய அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு அமைவாக கிராமத்துக்கு வீடு எனும் தொனிப்பொருளில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் அரசக்கேணி கிராமத்திலும்  கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலும் காஞ்சிபுரம் கிராமத்திலும் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிருஷ்ணபுரம் கிராமத்திலும் வீட்டுக்கான அடிக்கல்லை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமாரால் நாட்டி வைக்கப்பட்டது.

இதேபோன்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளோப்பளை கிராமத்துக்கு நிறைந்த கிராமம் திட்டத்தினூடாக முன்பள்ளி மற்றும் வைத்தியசாலை காண சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் சுபாஸ்கர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .