2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்டிவைப்பு

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

பச்சிலைப்பள்ளி - வண்ணாங்கேணி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலின் வசந்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல், நேற்று (23) நாட்டி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தரனின் ரூபாய் ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம், இந்த மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன்போது, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளையால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. 

இதில், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் குருகுலராசா, கரைச்சி  பிரதேச சபை தவிசாளர்  வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் உபதவிசாளர் கஜன், உறுப்பினர்களான ரமேஷ் வீரபாகுத்தேவர், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X