Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள அரச ஊழிர்கள் வீட்டுத் திட்டங்களில் வாழும் மக்களுக்கு, உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்புப் பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளைச் சுவீகரித்து, காணியற்றவர்களுக்கு வழங்குமாறு கோரி, அக்குடியிருப்பு மக்களால், குறித்த குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில், நேற்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இவ்விடயம் தொடர்பில், மாவட்ட மேலதிகச் செயலாளருடன் கலந்துரையாடி, ஒரு கால எல்லையை நிர்ணயிக்குமாறு தான் கேட்டுக் கொண்டதாகவும் இன்னும் பத்து நாள்களில் கூட்டமொன்றை நடத்தி ஏற்பாடு செய்யப்பட்டுளளதாகவும் கூறினார்.
அங்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கே வருமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த சிவமோகம் எம்.பி, அத்துடன், காணிகளுக்கான உரித்துகளை, இங்கே இருப்பவர்களுக்கு வழங்குவார்களாக இருந்தால், காணி இல்லாதவர்களும் இங்கே மீண்டும் வருவார்களெனவும் கூறினார்.
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago