Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா - மணிபுரம் கிராமமானது, வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூர்வீக கிராமமாக உள்ளபோதிலும், பல அடிப்படை தேவைகள் நிறைவேற்றாத நிலை காணப்பட்டு வருகின்றது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக, இக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் இந்தியா உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.
இந்நிலையில் குறித்த கிராமத்தில் பாதுகாப்|படைகள் தம் வசம் வைத்திருந்த நிலையில், 2000ஆம் ஆண்டளவில் மக்களை குடியேற அனுமதித்திருந்தனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் மெல்ல மெல்ல குறித்த கிராமத்தில் குடியேறிய நிலையிலும், இந்தியாவில் இருந்து நாடு திரும்பி கிராமத்தவர்களுமாக இக்கிராமத்தில் குடியேறிய நிலையில் வீட்டுத்திட்டம், வீதி வசதிகள் இல்லாத நிலையில் பலரும் வசித்து வருகின்றனர்.
அத்துடன், இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு கோழி வளர்ப்|பு உட்பட பல வாழ்வாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போதிலும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு வரிப்பணம் செலுத்தும் துர்ப்பாக்கி நிலையையும் எதிர்கொள்கின்றனர்.
எனவே, இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 hours ago
9 hours ago
27 Aug 2025
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Aug 2025
27 Aug 2025